ஜல்லிக்கட்டு: தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

சனி, 9 ஜனவரி 2016 (15:21 IST)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக விலங்குகள் நல அமைப்பு அறிவித்துள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதற்கு முன்னர் விலங்குகள் நல வாரியத்திடம் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை விலங்குகள் நல அமைப்பன பீட்டா கூறியுள்ளது.
 
இந்நிலையில், அவ்வாறு ஆலோசிக்காமல் இந்த அனுமதி, வழங்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது கூறியுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசின் சார்பில் கோவியட் மனுத்தக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் வாதத்தையும் கேட்க வேண்டும். தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்