தமிழகத்தில் ஜல்லிக்கட்டு துள்ளிக்கிட்டு வரும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி

வியாழன், 26 நவம்பர் 2015 (00:35 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடையின்றி நடைபெறும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
தமிழகத்தில், காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்கப்பட்ட வேண்டும் என ப்ளூகிராஸ் என்ற தன்னார்வ அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நீதி மன்றம் அதிரடியகா தடை விதித்தது.
 
மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்த பல்வேறு போராட்டங்களை நடத்தின.
 
இந்த நிலையில், டெல்லியில் மத்திய மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விலங்குகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரியமிக்க கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்றார்.
 
இதனையடுத்து, நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், ஜல்லிக்கட்டு போட்டி தயையின்றி நடத்த மத்திய அரசு புதிய மசோதா நிறைவேற்ற உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்