6 நாள் சூறாவளி சுற்றுப் பயணம்; போயஸ் கார்டனை கைப்பற்றுதல்: ஜெ.வின் அதிரடி அரசியலை தொடங்கினார் தீபா!

திங்கள், 30 ஜனவரி 2017 (15:10 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவை விரும்பாத அதிமுகவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்ற தீபா புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவித்திருந்தார்.


 
 
மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி புதிய கட்சியை பற்றி அறிவிப்பேன் என தீபா கூறியிருந்தார். தொண்டர்கள் மத்தியில் ஆதரவு திரட்ட தீபா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதனை திருச்சியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக தீபா கூறியுள்ளார். திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ள அவர், தமிழகம் முழுவதும் 6 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
 
இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு அதிமுக நிர்வாகிகளை சந்திக்கும் தீபா அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதம் பெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் நான் போயஸ் கார்டனுக்கு செல்வது தொண்டர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது எனவும் தீபா கூறியுள்ளார். இவரது இந்த அதிமுகவினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்