இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் “மேற்கு வங்கக் கடலின் வெளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரிரு பகுதிகளில் மழை பெய்யும்.
அதேபோல், மேற்கு வங்கக் கடல் பகுதியான ஒடிசாவை ஒட்டியுள்ள பகுதியில் வெளிமண்டலத்தில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.