சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்படியாவது பாஜகவுக்கு இழுத்துவிட வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பல முக்கிய பாஜக தலைவர்கள் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜக பிரமுகர் கங்கை அமரன், 'ரஜினி பாஜகவுக்கு வருவதை விட தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிப்பது நல்லது' என்று கூறியுள்ளார். இதனால் பாஜக தலைவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ரஜினியை கன்னடர் என்றும் அதனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் என்ன? அவர் மனுஷந்தானே! யார் மக்களிடம் அன்பாக இருக்கின்றார்களா, அவர்கள் தலைமை ஏற்பதில் எந்தவித தவறும் இல்லை' என்று கங்கை அமரன் மேலும் கூறினார்.