தேர்தலுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்பு பொய்யா?: தேர்தலே நடைபெறாத தொகுதிகளில் எப்படி கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்?

செவ்வாய், 17 மே 2016 (19:00 IST)
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று சுமூகமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு நேற்று 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.


 
 
இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என நேற்று மாலையே ஐந்து கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில் திமுக வெற்றி பெறும் எனவும், அதிமுக வெற்றி பெறும் என முரண்பட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இது தான் இன்று தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் இந்த கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய் என ஒரு தகவல் பரவி வருகிறது. இவர்கள் தேர்தலுக்கு பின்னர் சரியாக கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என கூறப்படுகிறது.
 
அதாவது தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளிலும் நேற்று தேர்தல் நடைபெறவில்லை. இதனையடுத்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே நேற்று தேர்தல் நடந்தது.
 
இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளுக்கும் சேர்த்து கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளனர். தேர்தலே நடைபெறாத தொகுதியில் இவர்கள் எப்படி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தினார்கள் என்பதே இப்போதைய பரபரப்பான கேள்வியாக சமூக வலைதளங்களில் உள்ளது.
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகளின் கூட்டுத்தொகையை கூட்டி பாருங்கள் அதில் 234 தொகுதிகளுக்கும் சேர்த்து அவர்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது புரியும்.
 
 
இந்தியா டுடே நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில்,
 
திமுக - 132
 
அதிமுக - 95
 
பாஜக - 1
 
மற்றவை - 6
 
நியூஸ் நேஷன் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
திமுக - 116
 
அதிமுக - 97
 
பாஜக - 0
 
மற்றவை - 21
 
நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
திமுக - 140
 
அதிமுக - 90
 
பாஜக - 0
 
மற்றவை - 4
 
ஏ.பி.பி நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
திமுக - 132
 
அதிமுக - 95
 
பாஜக - 1
 
மற்றவை -6
 
சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
அதிமுக - 139
 
திமுக - 78
 
பாஜக - 0
 
மற்றவை -17
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்