ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜ், தனது மனுவில், “ எங்கள் மகள்கள் கீதா (33) மற்றும் லதா (31), சிறுது நாட்களுக்கு முன்பு, ஈஷா யோக மையத்தில் யோகா கற்க சென்றனர். அந்த மையம் அவர்கள் இருவரையும் மூளை சலவை செய்து அங்கேயே இருக்கும் படி செய்துவிட்டனர். மேலும், தன்னை தானே கடவுள் என்று கூறி கொள்ளும், அந்த மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவ், எங்கள் இரு மகள்களையும், மொட்டை அடித்து, காவி வஸ்திரத்தை அணிய வைத்து, மற்ற வெளியுலக மக்களுடன் சேர விடாமல் தடுக்கின்றார். எம்.டெக், பி.டெக், போன்ற பட்டப்படிப்புகளை படுத்துவிட்டு, உயர் தர நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என் மகள்களை அவர் வசியம் செய்து, எங்கள் சொத்துக்களை அபகரிக்க பார்கின்றார். தங்கள் மகள்களை ஈஷா யோக மையத்திலிருந்து மீட்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.