விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுகுப் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடனிருந்த அவரது மகன் பாஜவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். உடனே அருகில் இருந்த தமிழிசையின் பாதுகவலர்கள் சுகந்தனை தடுத்து அங்கிருந்து கூட்டிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் , குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் சிறுதி கோபம் அடைந்து கட்சிதான் முக்கியமா என்று கேட்டு கோபப்பட்டார். இதை யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
நேற்று திருச்சியில் நடைபெறவுள்ள குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் விமானநிலையம் சென்றேன்.அப்போது மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக நிகழ்சி ஏற்பாடு ஆனது. இதையடுத்து நான் திருச்சி வரவில்லை, நீங்கள் செல்லுங்களென்று கணவரிடம் கூறிவிட்டேன்.அதனால் குடும்ப நிகழ்ச்சிக்கு வராததால் கோபம் அடைந்த மகன் சுகந்தன் கட்சிதான் முக்கியமா என்று கோபப்பட்டார். இதை மற்றவர்கள் அரசியலாக்குவது கீழத்தரமான செயல் என்று தெரிவித்துள்ளார்.