நடிகர்களுக்கு மக்களைப்பற்றி என்ன தெரியும், கமல்ஹாசனை மறைமுகமாக தாக்குகிறாரா செங்கோட்டையன்?

திங்கள், 20 பிப்ரவரி 2017 (22:43 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தனது டுவிட்டரில் அரசியல் குறித்து ஆக்ரோஷமான கருத்தை தெரிவித்து வருகிறார். குறிப்பாக சசிகலாவுக்கு எதிராகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராகவும் அவர் தெரிவித்து வரும் கருத்துக்கள் சூடாகவும் பரபரப்பாகவும் உள்ளது.



இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 'சினிமாவில் நடிப்பவர்களுக்கு மக்களைப்பற்றி என்ன தெரியும்' என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கியதாகவே அனைவரும் கருதுகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசனின் டுவீட் மக்களிடையே வன்முறையை தூண்டுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கோட்டையனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்