தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு? மின்வெட்டு வருமா?

ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (17:54 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதாகவும் இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது தமிழகத்திலும் மற்ற மாநிலத்தை போலவே மின்வெட்டு ஏற்படுமா என்பதை தற்போது பார்ப்போம் 
தமிழகத்தை பொருத்தவரை கோல் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலக்கரியை கடந்த செப்டம்பர் மாதம் சரிபாதியாக சரிந்துள்ளது. அதேபோல் வட சென்னை தூத்துக்குடி மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது
 
இந்த அனல் மின் நிலையங்களுக்கு தினசரி 60,265 டன் நிலக்கரி தேவைப்படுகிறது ஆனால் மத்திய அரசிடம் இருந்து கிட்டத்தட்ட பாதி அதாவது 36,255 டன் நிலைகளில்தான் கிடைத்துள்ளது 
 
கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி நிலக்கரி கையிருப்பு 1.78 லட்சம் மட்டுமே உள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்