வசமாக சிக்கிய இளவரசியின் மகன் விவேக்: பிராடு வேலை பார்த்ததால் ஆளுநர் விசாரணை!

திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:16 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள இளவரசியின் மகன் விவேக் மீது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
விவேக் சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் தேர்வுகளை எழுதியதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சட்டப் பல்கலைக்கழகம் பக்கத்திலேயே செல்லாத விவேக் எப்படி தேர்வுகளை எழுதியிருக்க முடியும் என்பது தான் பலரின் கேள்வி.
 
இந்த விவகாரம் குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விவேக் மீதான் புகார் குறித்து விசாரிக்க ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பினருக்கும் மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
 
ஏற்கனவே சசிகலா குடும்பத்தினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் இந்த விவகாரம் குடும்பத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் உள்ள நிலையில் டிடிவி தினகரன் நீதிமன்ற படிகளை மிதித்து வருகிறார். இந்நிலையில் விவேக் மீதும் விசாரணை ஆரம்பித்து இருப்பது சசி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்