ஜெ.வுக்கு பதிலாக யாருடைய படம்? அதிகாரிகள் குழப்பம்

வியாழன், 15 டிசம்பர் 2016 (16:21 IST)
அரசு விழாக்களில் முதல்வர் படம் தான் வைக்கப்படும். ஜெயலலிதா மறைவுக்கு பின் எந்த இடத்திலும் தற்போது உள்ள முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் படம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அரசு அதிகாரிகள் யாருடைய படத்தை வெளியிடுவது என்பது குறித்து குழப்பத்தில் உள்ளனர்.


 

 
தமிழகம் முழுவதும் எந்த விழா நடந்தாலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா படம்தான் வெளியாகும். ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைப்பெற்ற கூட்டங்கள் மற்றும் விழாக்களில் ஓ.பி.எஸ். படம் வெளியாகவில்லை. ஓ.பி.எஸ். இதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
 
இதனால் அரசு அதிகாரிகள் இனி அரசு விழாக்களில் யாருடைய புகைப்படத்தை வெளியிடுவது என்று குழப்பத்தில் உள்ளனர். சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறிவரும் நிலையில், அவர் பொதுச் செயலாளராக பதவி ஏற்றப்பின் ஜெயலலிதா பெயர்கள் இடம்பெற்ற இடத்தில் சசிகலா பெயர் மற்றும் புகைப்படம் இஅடம்பெறும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்