தமிழக எரிசக்தித்துறைக்கு தேசிய விருது - முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிறு, 12 ஜூன் 2016 (14:09 IST)
தமிழக எரிசக்தித்துறைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
 

 
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில், தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு,  2016ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
 
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்த தேசிய விருது கிடைத்துள்ளது.
 
இந்த விருதை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, முதல்வர் ஜெயலலிதாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்