முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழன், 12 மே 2022 (19:16 IST)
இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 
 
பொதுவாக ஜூன் முதல் வாரம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதும் அந்த நேரங்களில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பது தெரிந்ததே 
 
ஆனால் இந்த ஆண்டு மே 15 ஆம் தேதியே அதாவது இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் மே இறுதியில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
இதன் காரணமாக அக்னி நட்சத்திர வெயில் தத்தளித்து வரும் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்