ஜெர்மனியிலிருந்து மொபைல் ஆக்ஸிஜன் இயந்திரங்கள்! – இந்திய அரசு புதிய முயற்சி!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (12:17 IST)
இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஜெர்மனியிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிப்பு இயந்திரங்களை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தற்காலிகமாக ஆக்ஸிஜன் இருப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஜெர்மனியிலிருந்து மொபைல் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வாங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக 23 மொபைல் ஆக்சிஜன் இயந்திரங்கள் வாங்க உள்ளதாகவும் இவற்றை விமானம் மூலம் இந்தியா கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்