சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (22:05 IST)
ஆறு நாட்களுக்குப் பிறகு சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று காலையில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையானார்.

அவருக்குச் சிறையிலிருந்தபோது,கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிலநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும்சில நாட்களில் தமிழகத்திற்கு அவர் வரவுள்ளர்.

அவரை பிரமாண்டமான முறையில் வரவேற்க அமமுக பொதுச்செயலாளர் தினகரன், உள்ளிட்ட சசிகலா ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது பெங்களூர் மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலாவிற்கு 6 நாட்களுக்குப் பிறகு ரத்தம் அதிகரித்துள்ளதாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது,
மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் இதில் தெரிவித்துள்ளது.

அவர விரையில் பூரண குணமடையவேண்டுமென சசிகலா ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்துவரும் நிலையில் இன்று ஒபிஎஸ் மகள் அவர் நலம்பெற வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்