வைகோ மீதான வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

வெள்ளி, 3 ஜூலை 2015 (03:25 IST)
இந்திய இறையாண்மைக்கு எதிராக, பேசியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு  ஒத்திவைக்கப்பட்டது.


 

கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள, ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருதரங்கில், ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
 
அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளாக கூறி, அவர் மீது கியூ பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை, அதே போல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஆஜராகவில்லை. ஆனால், வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதி மன்றத்தில் விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி  கயல்விழி விசாரணையை, ஜூலை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்