’அந்த விஷயத்தில்’ மனைவி மீது சந்தேகம்... கணவன் வெறிச்செயல் ...

புதன், 23 ஜனவரி 2019 (16:12 IST)
சென்னையில் வசித்து வந்த கணவன் தன் மனைவியின் மீது சந்தேகம் கொண்டு அம்மிக்கல்லை தூக்கிப் போட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான துக்காராம் (42)  இவரது மனைவி காராபாய் (38) சென்னையில் உள்ள புளியந்தோப்பில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 
 
ஆனால் தன் மனைவி மீது அடிக்கடி சந்தேகம் கொண்டிருந்த துக்காராம் , அடிக்கடி தன் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். 
 
இன்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்துவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகா அனுப்பி வைத்தனர். 
 
மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்