தேனி மாவட்டச் செயலாளராக ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டச் செயலாளராக ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வனை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இதன் மூலம் தேனி மாவட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, தங்கதமிழ் செல்வனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வருத்தமாக உள்ளனர்.