வகுப்பறையில் போன் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம் - பொறியியல் கல்லூரி அதிரடி

சனி, 9 ஜூலை 2016 (16:43 IST)
கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் வகுப்பறையில் செல்போன் பேசினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
மாணவர்களை நல்வழிப்படுத்தவும், படிக்கிற நேரத்தில் அவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் எனக்கூறி செல்போன்கள் பயன்படுத்துவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
 
இந்நிலையில், கிண்டி பொறியியல் கல்லூரியில் வகுப்பறையில் செல்போன் பேசினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து நிர்வாகத்தினர் கூறும்போது, ”இது மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. மாணவர்கள் மத்தியிலும் இந்த கட்டுப்பாட்டுக்கு ஆதரவு இருக்கிறது. மாணவர்களை கஷ்டப்படுத்தும் அல்லது துன்புறுத்தும் எண்ணம் எதுவும் கிடையாது.
 
யாராவது பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டாலும் அந்த பணத்தை வசதி இல்லாத மாணவர்கள் நலத்திட்டங்களுக்குத்தான் செலவிடுகிறோம். இதற்காக மாணவர்களும் நிதி வழங்குவது உண்டு. வாரத்தில் 2 நாட்கள் மாணவர்களுக்கு இது தொடர்பாக ‘கவுன்சிலிங்’ அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்