சசிகலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை?: அபராத தொகை கட்டாததால் சிறைத்துறை நடவடிக்கை!

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (11:48 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் தங்கள் அபராத தொகையை இதுவரை செலுத்தாததால் அவர்களது சிறை தண்டனை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.


 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
இதில் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரது சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது, அவரது 100 கோடி ரூபாய் அபராதத்தை சொத்துக்களை விற்று கட்ட வேண்டும் எனவும் மற்றவர்கள் தங்கள் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனால் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் இதுவரை தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா 10 கோடி ரூபாய் அபராதத்தை கட்டவில்லை. இந்நிலையில் கர்நாடக பரப்பன அக்ரஹாரா சிறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.


 
 
அதில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் தலா 10 கோடி அபராதம் செலுத்த வேண்டும், 4 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். அவர் தனது அபராத தொகையை கட்ட தவறினால் அவரது சிறை தண்டனை மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்படும். அவருக்கு சிறையில் டிவி, மின்விசிறி, நாற்காலி போன்றவை அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்