75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பினர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோன்ஸ் என்பவர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதால் அதனை விசாரிக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விடுமுறைகாலை பெஞ்ச் நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது கூறிய அவர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக கூறினார். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் எந்தவித புகைப்படமோ, வீடியோவோ வெளியிடவில்லை என்றார்.