அழகிரியை சேர்த்தால் திமுகவை உடைப்பேன்: ஸ்டாலின் கருணாநிதியிடம் ஆவேசம்

திங்கள், 8 பிப்ரவரி 2016 (15:20 IST)
திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்தலோ, சந்தித்தாலோ நான் எனது ஆதரவாளர்களுடன் கட்சியை உடைக்க நேரிடும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கடந்த சில நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அழகிரி விரைவில் திமுக-வில் சேர்வார் என தகவல்களும் வந்தன. இந்நிலையில் அழகிரியின் பிறந்த நாள் அன்று அவர் கோபாலபுரத்துக்கு சென்றுள்ளார்.
 
அப்போது அவர் தன்னுடையை தாயை மட்டும் சந்தித்து ஆசி பெற்றுவிட்டு, கருணாநிதியை சந்திக்காமல் வந்துள்ளார். கருணாநிதியை சந்திக்க அவரிடம் இருந்து அழைப்பு வரவில்லை எனவும், இதற்கு காரணம் ஸ்டாலின் தான் காரணம் என கூறப்படுகிறது.
 
தென் மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக, அழகிரி ஆதரவாளர்களை ஸ்டாலின் தன் பக்கம் சேர்த்து வருகிறார். அழகிரி அப்பப்போது ஸ்டாலினுக்கு எதிராக பேட்டியளித்து இருவருக்கும் இடையேயான விரிசலை பெரிதாக்கி வருகிறார். இந்நிலையில் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி மேற்கொள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இதனால ஆவேசமடைந்த ஸ்டாலின் கருணாநிதியிடம் காட்டமாக பேசியதாக கூறப்படுகிறது.


 
 
கட்சியின் வளர்ச்சிக்கு உயிரைக்கொடுத்து நான் உழைத்து வருகிறேன், ஆனால் அழகிரி கட்சிக்கு எதிராக பல மாதங்களாக செயல்பட்டு வருகிறார். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தாலோ, அழகிரியை நீங்கள் சந்தித்தாலோ, நான் என் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடுமையான முடிவை எடுக்க நேரிடும் எனவும் இதனால் கட்சி பிளவுபடலாம் என ஸ்டாலின் கருணாநிதியிடம் கூறியதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக தான் கோபாலபுரத்துக்கு வந்த அழகிரியை கருணாநிதி சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்