நான் அம்மாவின் தளபதி; குட்டி சிங்கம்: கர்ஜித்த சசிகலா

ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (20:51 IST)
செய்தியாளர்கள் சந்திப்பு பின் எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய சசிகலா நான் எதற்கும் அஞ்ச மாட்டேன், அம்மாவின் தளபதி, குட்டி சிங்கம் என்ற வார்த்தைகளால் மூலம் தன்னை பெருமைப்படுத்தி பேசினார்.


 

 
ஏம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சென்ற நாளில் இருந்து எந்த செய்தியாளர்களும் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு நட்சத்திர விடுத்திக்குள் அனுமதி வழங்கப்பட்டது.
 
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கூவத்தூர் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்திந்த பின் எம்.எல்.ஏ.க்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேசினார். 
 
அதில், நான் அம்மாவின் தளபதி, குட்டி சிங்கம், நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்