திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லை: மு.க.அழகிரி

ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (23:03 IST)
திமுக தலைவர் கருணாநிதியை நான் சந்திக்கவே இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

 
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு, தனது தந்தையும், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெறுவார் என்று தகவல் வெளியானது.
 
இதற்காக, அவரது சகோதரி செல்வி கருணாநிதியிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், தனது பிறந்த நாளுக்காக ஆசி பெற்றார்.
 
இது குறித்து, மு.க.அழகிரியிடம் கேட்ட போது, நான் எனது தாயாரை மட்டுமே சந்தித்தேன். திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லை என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்