முதல்வர் சந்திக்க மறுப்பா?: சரத்குமார் விளக்கம்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:52 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நடிகர் சரத்குமாரை சந்திக்க மறுத்து விட்டதாக நேற்று பத்திரிக்கை செய்தி ஒன்றில் வெளியானது. இந்த செய்தியை சரத்குமார்  தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் மறுத்துள்ளார். 


 
நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு  முதல்வர் ஜெயலலிதா வருகை தந்தார்.

அப்போது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், முதல்வரைச் சந்திக்க முயன்றுள்ளார். ஆனால், ஜெயலலிதா சந்திக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்கு தற்போது சரத்குமார் டிவிட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அந்த பத்திரிகையில் வந்த புகைப்படத்தை மேற்கோள் காட்டிய சரத்குமார், இந்தப் படம் நான் முதல்வரை அவரது காருக்கு அருகே சென்று பார்த்து விட்டுத் திரும்பியபோது எடுத்த புகைப்படம்.

அப்போது, " நான் முதல்வரை பார்த்து சிறிது நேரம் பேசினேன், அப்போது முதலமைச்சரின் கார் ரிவர்ஸில் வந்து கொண்டிருந்தது. என்னை அவமானப்படுத்தியதில் உண்மை இல்லை என்றும்  தவறான செய்திகள் கலங்க படுத்தும்,  உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில்தான் எத்தனை மகிழ்ச்சி, வணக்கம்" என்று  சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

 

@sandheep_shan @vikatan This picture was taken after I saw the Hon CM near the car and as the car was reversing, untruth to slander me

— R Sarath Kumar (@realsarathkumar) October 12, 2015


தவறான செய்திகள் கலங்க படுத்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில்தான் எத்தனை மகிழ்ச்சி, வணக்கம்
— R Sarath Kumar (@realsarathkumar) October 12, 2015

வெப்துனியாவைப் படிக்கவும்