அவருக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கபப்ட்ட பின் அவர் மேடையில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேவரத்தைச் சேர்ந்த 12 தமிழக மீன்வர்களை இன்று யாழ்பாண சிறையில் சந்தித்தேன். தமிழக பாஜக சார்பில் அவர்களுக்கு உடை, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மீனவர்கள் விரைவில் தமிழகத்திற்கு வந்துவிடுவர் எனத் தெரிவித்துள்ளார்.