மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அஞ்சலிக்கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினார்கள். இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து ஜெயலலிதாவின் தேர்தல் தோல்விக்கு நான் தான் காரணம் என கூறினார்.
இது குறித்து அவர் பேசியதாவது, 1996 தேர்தல் நேரத்தில் புரட்சித்தலைவி அவர்களுடைய ஆட்சியை, அவரை விமர்சித்து எழுதி, அந்த தேர்தலில் அவர் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக நான் இருந்தேன். அவர்களுடைய மனசை நான் ரொம்ப பாதிச்சிருந்தேன்.
ஜெயலலிதா வரமாட்டாங்கன்னு நினைத்து சம்பிரதாயத்துக்கு நீங்க வரணும் அப்டினு கேட்டோம். எங்களைப் பாத்தாரு இதே தேதில வந்துட்டு, நம்ம கழகத்தோட இன்னொரு தொண்டருடைய கல்யாணம் இருக்கு. பரவால்ல நான் அதை தள்ளிவெச்சுக்கச் சொல்றேன். இந்த கல்யாணத்துக்கு நான் நிச்சயமா வருவேன்னு சொன்னாங்க.
சொன்னபடி, கல்யாணத்துக்கு வந்து அவரின் முன்னிலையில அந்த கல்யாணத்தை நடத்தி வெச்சாங்க. அந்த மாதிரி பொன் மனசு கொண்ட புரட்சித்தலைவி அவர்கள் எங்கள் கூட இல்லை என ரஜினிகாந்த் தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.