சென்னை மாவட்ட பாமக இளைஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் தி.நகரில் நேற்று நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், ”பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக இருக்கிறேன்.
ஆனால், அப்படி எந்தவொரு கட்சியும் இங்கு இல்லை. முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்போது ஊடகங்களுடன்தான் கூட்டணி என்று அறிவித்தோம். அந்த நிலையில் இருந்து நாங்கள் இன்றும் மாறவில்லை. ஆனால், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க மறுக்கின்றன.