நான் ஒன்னும் திருடி கிடையாது; ஜீப்பில் ஏற மாட்டேன்: வாக்குவாதம் செய்த சசிகலா!

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (17:07 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி சசிகலா சரணடைந்த போது போலிஸ் ஜீப்பில் ஏறமாட்டேன் என சசிகலா வாக்குவாதம் செய்ததாக செய்திகள் வருகின்றன.


 
 
14-ஆம் தேதி சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு வந்ததும் அவர்கள் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 15-ஆம் தேதி மாலை பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 
பின்னர் அவர்களை சிறையில் அடைக்க சிறைவாயில் வரை அழைத்து ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்ல போலிசார் முயன்றனர். ஆனால் இதற்கு சசிகலா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கும் போலீசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
நான் ஒன்றும் திருடி கிடையாது போலீஸ் ஜீப்பில் திறந்த வெளியில் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து செல்ல. சிறை எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே வருகிறேன் என சசிகலா கூறியுள்ளார்.
 
இதனையடுத்து போலீசார் ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை நடத்தியே கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். சென்ற முறை ஜெயலலிதா இருந்ததால் அவருக்கு ஜெயிலில் முதல் வகுப்பு அறை மற்றும் வசதிகள் கிடைத்தது. ஆனால் இந்த முறை சசிகலாவின் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் மிகவும் கோபமாக கணப்பட்டதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்