அக்னிப் பரிச்சைக்கும் தயராக உள்ளேன்: வைகோ

புதன், 21 அக்டோபர் 2015 (06:18 IST)
நேர்மையின் நெருப்பாக வாழ்கிறேன்; களங்கம் அற்றவன் என்பதை நிரூபிக்க அக்னி பரீட்சைக்கும் தயராக உள்ளேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையிுல் கூறியுள்ளதாவது:-
 
ரீவைகுண்டம் அணை துார்வாராமல் இருப்பதால், 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி இழந்துள்ளது. 8 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க வேண்டிய அணையில், அமலைச் செடி படர்ந்து, ஒரு அடி உயரத்துக்கு மட்டுமே நீர்த்தேக்கும் நிலை நீடித்தது. இதையடுத்து, துாத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க., செயலர் ஜோயல் மூலம், பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.
 
ஸ்ரீஅணையை துார்வார வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி கொடுக்க ஜூலை, 10ஆம் தேதி வரை பசுமை தீர்ப்பாயம் அவகாசம் அளித்தது. இந்த கெடுவுக்குள், மத்திய அரசு அனுமதி வழங்கா விட்டால், ஜூலை 11ஆம் தேதி தமிழக அரசே பணிகளைத் துவங்கலாம் என்றும் உத்தரவிட்டது.
 
ஆனால், ஜூலை 10ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருந்தும், தமிழக அரசு பணியைத் துவங்கவில்லை. துார்வாரும் பணியை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் துவங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தேன். அதன் பிறகே, துார்வாரும் பணியை துவங்குவதாக தமிழக அரசு தெரிவித்தது.
 
மேலும், அணைப் பகுதியில் இருந்து துார்வார வேண்டும், வடகரையையும், தென்கரையையும் இணைக்கும் அகலத்துக்கு துார்வார வேண்டும் என்ற கோரிக்கையை தீர்ப்பாயம் ஏற்றது.
 
தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில், மணல் அள்ளும் வேலை நடக்கிறது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு போராட்டம் நடத்திய பின்பு, மணல் கொள்ளை நடக்க அனுமதிக்க கூடாது என்றும் அணைக்கட்டு பகுதியிலிருந்து துார்வார வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டேன்.
 
ஆனால், மணல் கொள்ளை நடப்பது குறித்து அமைதியாக இருந்தேன், என் நடவடிக்கை சந்தேகத்திற்கு உரியது என்ற கருத்து, மனதை காயப்படுத்தி உள்ளது. பொது வாழ்க்கையில், 51 ஆண்டுகளாக உள்ளேன்.
 
நேர்மையின் நெருப்பாக வாழ்கிறேன்; களங்கம் அற்றவன் என்பதை நிரூபிக்க அக்னி பரீட்சைக்கும் தயராக உள்ளேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
வைகோ, மதிமுக, ஸ்ரீவைகுண்டம் அணை, தாமிரபரணி, பசுமைதீர்பாயம், மத்திய அரசு, தமிழர அரசு, மணல் கொள்ளை, நேர்மை, சென்னை

வெப்துனியாவைப் படிக்கவும்