கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது!

வெள்ளி, 1 ஜூலை 2022 (14:11 IST)
கொடைக்கானலில் மூன்று மாத கர்ப்பிணியான இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழ‌ந்தார். இதில் அந்தப் பெண்ணின் க‌ண‌வ‌ர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்த மோனிஷா என்ற 23 வயது பெண் வட்டகானல் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சாம் என்பவரை ஆறு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணமாகி ஆறு மாதம் முடிந்த நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த மோனிஷா கடந்த ஜூன் 4ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்ததாக காவல்துறைக்கு மோனிஷாவின் கணவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
23 வயது மோனிஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் எப்படி தூக்கிட்டுக் கொள்வார் என்று மோனிஷாவின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
விசார‌ணையை தீவிர‌ப்ப‌டுத்த‌வில்லை என‌ ஆத்திரமடைந்த மோனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர், க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன் நாயுடுபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மோனிஷாவின் கணவா் ஆரோக்கிய சாம் மற்றும் உறவினா்களிடம் போலீஸாா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் விசாரணை நடத்தினா்.
 
அவரிடம் 26 நாள்கள் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஆரோக்கிய சாம் தூண்டுதலின்பேரில், அவருடைய கா்ப்பிணி மனைவி மோனிஷா தற்கொலை செய்துகொண்டதாதத் தெரியவந்துள்ளது என்றும் இதையடுத்து மோனிஷாவின் கணவரை கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கொடைக்கானல் காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்