திமுக சார்பில் மருது கணேஷ்க்கு வேட்பாளர் சீட் எப்படி?

புதன், 15 மார்ச் 2017 (18:03 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொகுதியில் திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி என திமுகவினர் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.


 

 
திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அனைவரிடமும், இவர் யார்? இவரை ஏன் தேர்ந்தெடுத்தனர் என கேள்வி எழுந்தது. இவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என திமுக கட்சியினர் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.
 
சாதாரண கட்சித் தொண்டனுக்கும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தது போல, இந்த முறை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், கட்சியின் தீவிர தொண்டர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க விரும்பினார்.
 
மருது கணேஷ், கட்சி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக இவரது குடும்பத்தினர் திமுக-வில் இருந்து வருகின்றனர். 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் ஆகிய இரண்டிலும் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட மருது கணேஷ் விருப்பப்பட்டார். இதையடுத்து அவர் இந்த முறை வேட்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்.
 
இவர் சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக, ஆர்.கே.நகர் பகுதியில் இருப்பவர்களுக்கு சட்ட ரீதியில் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
 
மருது கணேஷ் தொகுதியில் செலவழிக்க என்னிடம் பணம் கிடையாது, கட்சிதான் செலவழிக்க வேண்டும் என்று நேர்காணலின் போது கூறியுள்ளார். இது கட்சித் தலைமைக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். 
 
இவை அனைத்தையும் பட்டியலிட்ட திமுகவினர் மருது கணேஷ்க்கு வேட்பாளர் சீட் கிடைக்க இதுவே காரணம் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்