மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

Siva

ஞாயிறு, 23 ஜூன் 2024 (11:21 IST)
கள்ளக்குறிச்சி விஷசாராய பலி வழக்கில், ஓட்டல் உரிமையாளரின் ஜிஎஸ்டி எண்ணை மாதேஷ் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 3 முறை தலா 1000 லிட்டர்  தின்னரை மாதேஷ் எடுத்துக் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விருத்தாச்சலம் தனியார் தொழிற்சாலையில் ஆய்வு செய்ததில் அனைத்தும் தின்னர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்
 
மேலும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். ஹோட்டல் சிசிடிவி காட்சிகளில் மாதேஷ் வந்து செல்லும் காட்சி, மெத்தனாலை ஓட்டலில் வைத்து எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
 
ஓட்டல் உரிமையாளரின் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி கள்ளச்சாரயத்திற்கு மெத்தனால் வாங்க பயன்படுத்திய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்