தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று: வெளியே செல்வதை தவிர்க்க கோரிக்கை

புதன், 31 மார்ச் 2021 (12:30 IST)
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று: வெளியே செல்வதை தவிர்க்க கோரிக்கை
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இவ்வளவு வெயிலா என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை கடுமையான அனல் காற்று வீசும் என்றும் அதனால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பரப்புரை செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்கலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தி உள்ளது
 
சென்னை வேலூர் மயிலாடுதுறை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்