கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வு

சனி, 5 டிசம்பர் 2015 (12:47 IST)
கனமழை காரணமக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 


 
 
மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய காய்கறிகள் சரியாக வரவில்லை. பொதுமாக தினசரி 300 லாரிகளில் காய்கறிகள் வரும். ஆனால் மழை காரணமாக வெறும் 110 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்துள்ளது.
 
அதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக மூன்று நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய சென்னை வாசிகள் இன்று கோயம்பேட்டில் காய்கறிகளை வாங்க குவிந்தனர். ஆனால் காய்கறிகளின் விலையை கேட்டதும் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.120, முருங்கைக்காய் ரூ. 160, பாகற்காய் ரூ. 100, கோவக்காய் ரூ. 60, முட்டை கோஸ் ரூ. 40, பச்சை மிளகாய் ரூ. 50, மல்லி, புதினா ஒரு கட்டு ரூ. 15–க்கு என்று விற்பனையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்