அடையாறு ஆற்றின் பாலத்திற்கு மேல் செல்லும் தண்ணீர்

புதன், 2 டிசம்பர் 2015 (08:42 IST)
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.  நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து செம்பரபாக்கம் ஏரியிலிருந்து 30000 கன அடி நீர்  நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


 

சைதாபேட்டை, ஈக்காட்டுதாங்கல், அடையாறு பாலங்களின் மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.  பாலங்களின் மேல் தண்ணீர் செல்வதால் 100 அடி சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் சென்னை விமான நிலையம் மூடப்படுவது இது முதல்முறையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்