தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, பெருஞ்சாணி அணை, சிவலோகத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவானது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் திடீரென வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, பெருஞ்சாணி அணை, சிவலோகத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, புத்தன் அணை, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும், பாம்பன், உசிலம்பட்டி, ஏலகிரி, கொடைக்கானலில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.