மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

வியாழன், 19 நவம்பர் 2015 (12:31 IST)
கனமழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஜெயலலிதா தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
தமிழத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. பலர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பியது உள்ளிட்ட உதவிகளுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களு குறித்து மதிப்பிட மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
 
23 ஆம் தேதி திங்கட்கிழமை வெள்ள சேதம் குறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறினார்.
 
இந்நிலையில், தமிழகத்திலிருந்து அனுப்படும் அறிக்கை கிடைத்தவுடன், மத்திய குழு தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்