வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: செப்டம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை..!

Mahendran
சனி, 31 ஆகஸ்ட் 2024 (10:16 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து நாளை அல்லது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வரும் நிலையில் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை மிதமான மழை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை வரை பெய்யும் என்று சில பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்