தர்மபுரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு: மது பழக்கமும் ஒரு காரணம் - அன்புமணி ராமதாஸ்

புதன், 19 நவம்பர் 2014 (19:57 IST)
குழந்தைகள் இறப்பதற்கு இங்கு உள்ள மருத்துவர்கள் காரணமல்ல என்று கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், ஆண்கள் குடிப்பதினால் பெண்கள் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம் என தெரிவித்துள்ளார்.
 
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து வருவதையடுத்து, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இன்று மருத்துவமனைக்கு சென்று குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டவர்.
 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, குழந்தைகள் இறப்பதற்கு இங்கு உள்ள மருத்துவர்கள் காரணமல்ல. ஆண்கள் குடிப்பதினால் பெண்கள் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம். மதுக்கடைகளை மூடுவது சம்பந்தமாக முதல்வரை சந்தித்து பேசுவேன்.
 
போதுமான மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இருதய பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு கொண்டுவர வேண்டும். மற்றபடி குழந்தைகள் இறப்பதற்கு மருத்துவர்கள் காரணமல்ல" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்