6 மணி நேரம், 12 நாள் எது பெரிசு? கமலிடம் கேள்வி கேட்ட ஹெச்.ராஜா

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (15:04 IST)
கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புயல் பாதித்த 6 மணி நேரத்தில் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ததாகவும், 12 நாள் கழித்து பார்வையிட்ட கமல்ஹாசன், மத்திய அரசை கேள்வி கேட்பதா? என்றும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் 16ஆம் தேதி கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய நிலையில் 21ஆம் தேதியே கமல் தஞ்சை உள்பட பல பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்கி அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டார். மேலும் நேற்று மீண்டும் புயல் பாதித்த கிராமங்களுக்கு சென்று அப்பகுதியின் நிலைமையை அரசிடம் எடுத்து கூறியதோடு, நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, 'கமல்ஹாசன் 12 நாட்களுக்கு பின்னர் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றுவிட்டு ஏற்கனவே நிவாரண பணிகளை துரிதமாக செய்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசை விமர்சிப்பதாகவும், அவர் மத்திய அரசை விமர்சிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு வழக்கம் போல் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்