பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சிலமணி நேரங்களில் நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பெரியார் பதிவை தான் பதிவு செய்யவில்லை என்றும், தன்னுடைய அனுமதியின்றி அட்மின் செய்த பதிவு என்றும், இந்த பிரச்சனை பூதாகரமான ஆனதை அறிந்து தான் அந்த பதிவை நீக்கிவிட்டதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது.