மரியாதையா பேசுடா - டிவிட்டரில் எகிறிய ஹெச். ராஜா

வெள்ளி, 9 ஜூன் 2017 (11:02 IST)
தமிழக அரசியல் பற்றியும், பாஜகவிற்கு ஆதரவாகவும் தனது டிவிட்டரில் பக்கத்தில் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருபவர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.


 

 
மத்திய அரசு சமீபத்தில் மாட்டிக்கறி இறைச்சிக்கு தடை விதித்ததற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாவட்டங்கள் அதை ஏற்க முடியாது என அறிவித்துவிட்டன.
 
சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த ஒருவர்  “மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முதலில் தடுத்து நிறுத்துங்கடா. ஒன்றுக்கும் உதவாத அரசு!” என காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதற்கு “கொஞ்சம் மரியாதையா பேசுடா” என ஹெச்.ராஜா கோபமாக பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்