இந்நிலையில் பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில்,. 2019-2020 அம் ஆண்டில் 9 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அதில் அதிக மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எதில் தேர்வு பெறவில்லையோ அந்தப் பாடத்திற்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்களை வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் இந்த இரு தேர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை என்றால் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கலாம் எனவும் எதாவது ஒரு தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.