பொருளாதார மந்தநிலையின் போதும், தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. டாப்!!

Arun Prasath
சனி, 19 அக்டோபர் 2019 (11:13 IST)
நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோதும், தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வசூல் வளர்ச்சி கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டில், ஜி.எஸ்.டி. திட்டத்தின் கீழ் வரி வசூல் 42 ஆயிரத்து 765 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரியின் வருவாய் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய்  91,916 கோடி என கூறப்படுகிறது. இது கடந்த 19 மாதங்களில் மிகவும் குறைந்த ஜிஎஸ்டி வரி வருவாய் என கணக்கிடப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பரை விட 2.67 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனினும், தமிழகத்தில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜி,எஸ்,டி. வசூல் 4.64 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோதும், தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்