லிட்டர் சாராயம் 1300 ரூபாய்: கல்லா கட்டிய கடைகாரர் – கைது செய்த போலீஸ்!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (15:02 IST)
கிருஷ்ணகிரியில் கடையில் கள்ள சாரயத்தை பதுக்கி வைத்து விற்ற மளிகைக் கடைக்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது விரும்பிகள் போதைக்காக கள்ளச்சாரயத்தை நாட தொடங்கியுள்ளனர். இதனால் போலீஸார் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளதால் கள்ளசாரயம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கள்ளசாராயத்தை வாங்கி கடையில் பதுக்கி வைத்த கடைக்காரர் ஒருவர் அதை லிட்டர் ரூ.1300 என்று விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மந்தூர் போலீசார் கள்ளசாராயம் விற்ற பெருமாளின் கடையை சோதனையிட்டதில் அவர் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்