ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வழக்கு; பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வெள்ளி, 10 மார்ச் 2017 (18:06 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அத்திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


 

 
மத்திய அரசின் ஹைட்ரா கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை சேர்ந்த மக்கள் இருபது நாட்களுக்கும் மேலாக போராடி வந்தனர். இவர்களின் போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஆதரவு அளித்தனர். அண்மையில் தமிழக அரசு சார்பில் போராட்டத்தை கைவிட கோரி தமிழக முதல்மைச்சர் தெரிவித்தார். ஆனால் மக்கள், முழுமையாக இத்திட்டத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து இருந்தனர்.
 
மாவட்ட ஆட்சியர் சார்ப்பில் போராட்டக் குழுவினருடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்த போராட்டத்தை மத்திய அரசு துளியும் கவணிக்கவில்லை. இதுசார்ந்து தமிழக பாஜக நிர்வாகிகள் மட்டும் இத்திட்டத்தால் விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.
 
இதைத்தொடர்ந்து நேற்று நெடுவாசல் கிராம மக்கள் மத்திய, மாநில வாக்குறுதிகளை ஏற்று தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. 
 
வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் மத்திய, மாநில அரசுகள் இத்திட்டம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்