கிரானைட் முறைகேடு: 83 நிறுவனங்களிடம் விசாரணை நடத்த முடிவு

வியாழன், 28 மே 2015 (17:31 IST)
கிரானைட் முறைகேடு தொடர்பாக 83 கிரானைட் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனும், தனியாக விசாரணை நடத்தி வருகிறார். அவர் அபராதம் விதிப்பது தொடர்பாக 83 குவாரி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
 
அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக பல்லவா, ஹிந்து, எம்.எஸ். உள்ளிட்ட 8 நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றது. இறுதிக்கட்ட விசாரணையில் கிரானைட் நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 83 நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் முடிவு செய்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்