நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் வழக்கு தொடருவேன்: சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை

ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (15:28 IST)
தமிழக அரசியில் நிலவரம் குறித்து ஆளுநர் நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடருவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.


 

 
தமிழக அரசயலில் தினம் தினம் மாற்றமும், பரபரப்பும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா என இரண்டு அணிகளாக பிரிந்து பெரும்பான்மையை நீருபிக்க போட்டியிட்டு கொண்டிருக்கின்றனர்.
 
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். நேற்று தமிழகம் வந்த சுப்ரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்துவிட்டு சென்றார். அவரது சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக அரசியல் நாளைக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் தாமதம் காட்டுவது குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும். மேலும் ஆளுநர் மீது வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்